Subscribe Us

Header Ads

ஜார்ஜஸ் ஹென்றி

 

ஜார்ஜஸ் ஹென்றி

      

  •      இவர் பெல்ஜியத்தில் சாலர்வ் என்ற இடத்தில் 1894-ம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி பிறந்தர் .
  • பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு லுவென் கத்தோலிக்கப்பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் படித்தார் .
  • 1914-ம் ஆண்டு முதல் உலகப் போ,இன் கோது நாட்டுக்காக தன் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பெல்ஜியம் ராணுவத்தில் பீரங்கிப்படையில் அகிகாரியாகப்பணியாற்றினார். 
  • இவரது ராணுவ சேவையைப்பாராட்டி அரசு வார் கிராஸ் பதக்கம் கொடுத்து கவுரவித்தது. போருக்குப்பின் இயற்பியல் , கணிதம் மீது இவருக்கு ஆர்வம் திரும்பியது. 
  • அதன்பின் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்களகத்தில் வானியல் பட்டம் பெற்றார். இங்கிலாந்து வானியல் நிபுணர் ஆர்தர் எட்டிங்டனுடன் இணைந்து பணியாற்றினார். 
  • அவரது வழிகாட்டுதலில் நவீன பிரபஞ்சவியல் ,விண்மீன்கள் ,வானியல் ,எண் கணித பகுப்பாய்வு ஆகிய துறைகளில்பல நேர்த்தியான விஷயங்களை அறிந்துக்கொண்டார். ஹார்வர்ட் கல்லூரியில் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஜார்ஜஸ் லுமேட்டர் மாஸாசூசெட்ஸ் தொழில்நுன்ப கழகத்தில் (எம்.ஐ.டி) அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார் .
  •  அதன்பின் பெல்ஜியம் திரும்பி கத்தோலிக்கப்பல்கலைகழகத்தில்பகுதிநேர விரிவுரையாளராகச் சேர்ந்தார் .பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற  ஹப்பிள் விதியை (  ) எட்வின் ஹப்பிள் கூறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1927-ம் ஆண்டுல் இவர் வெளியிட்டார்.
  • காஸ்திக் எக் என இவர் கண்டுபிடித்த கோட்பாடுதான் பிற்காலத்தில் பெருவெடிப்பு  கோட்பாடு என்ற பெயரில் பிரபலம் அடைந்தது .ஆனால் இவர் அதைக்கண்டுபிடித்து ஆராய்ச்சிக்கட்டுரை வெளியிட்டபோது பெல்ஜிய வானியலாளர்கள் மத்தியில் கூட அது  எடுபடவில்லை. கட்டுரையை 
  • இவர் 1931-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து  வெளியிட்டார். பிரபஞ்சம் -ஆன்மிகம்  இடையே  உள்ள தொடர்பைக்கண்டறியும் பிரிட்டிஷ் அசோசியேஷன் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார் . 
  • அங்கு பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் தனது பிரிமிவல் ஆட்டம்  காஸ்மிக் கோட்பாடுகளை விவரித்தார். 
  • மெல்ல மெல்ல ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கத்தொடங்கினார்.
  •  பிறகு இவரது கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1936-ல் வாடிகள் பான்டிபிகல் அறிவியல் அகாடமி உறுப்பினராக தேந்தெடுக்கப்பட்டார்
  • .1960-ல் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார் .இறுதிவரை அங்கேயே பணியாற்றினார். 
  • இவர் தி பிரிமிவல் ஆட்டம் ஹைப்போ தீசிஸ்  என்ற பிரெஞ்சு  மொழி நூலை 1946-ல் வெளியிட்டார்.
  •  அதே ஆண்டு ஸ்பானிய  மொழியிலும் 1950-ல் ஆங்கிலத்திலும் அந்த நூல் மொழி பெயர்க்கப்பட்டது. தான் பணியாற்றிய  பல்கலைக்கழகத்தில் 1958-ல் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார். பிரபஞ்சவியல் கணக்கீடுகயைப்பயன் படுத்துவதில் முன்னோடியாகத்திகழ்ந்தார். 
  • இறுதிவரை பிரபஞ்ச ஆய்வை மேற்கொண்டு வந்த ஜார்ஜஸ் லுமேட்டர் 1966-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி மறைந்தார்.


Post a Comment

0 Comments