நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக சர்க்கரை காரணமாக உடலில் ரத்தத்தை கொண்டு செல்லும் பெரிய மற்றும் சிறிய ரத்த நாளங்கள் சேதமடைகின்றன. இது மாரடைப்பு மற்றும் சிறிய ரத்த நாளயங்கள் சேதமைகின்றன. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் மற்றும் சிறுநீரகங்கள் , கண்கள், பாதங்கள் மற்றும் நரம்புகளில் பல பாதிப்புகளை உருவாக்கும். நீரிழிவு நோய்க்கு மிக மோசமான எதிரிகளாக புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் உள்ளன.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் தொடர்ந்து புகைத்தால் சிகரெட்டில் உள்ள நிகோடின் மற்றும் கடுமையான ரசாயனங்கள் உடல் செல்களை சேதப்படுத்துகின்றன. ஏனெனில் நிகோடின் ,ரத்த குளுக்கொஸ் அளவைக்கட்டுக்கள் வைத்திருப்பதை கடினமாக்குகிறது.நீரிழிவு நோயாளிகள் புகைத்து வந்தால் உடல் எடை இழப்பு ரத்த அழுத்த உயர்வு ,உணவு சத்துக்கள் உடலில் உட்கிரகிக்கப்படாமல் போவது , சிறுநீரங்கள் செயல் இழப்பு போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.புகை பிடிக்காத நீரிழவு நோயாளிகளை விட புகைக்கும் பழக்கம் உள்ள நீரிழவு நோயாளிகளுக்கு உடலில் அதிக ரத்த குளுக்கோஸ் அளவு காணப்படுகிறது.புகைப்பழக்கம் இன்சுலின் சுரப்பு கட்டுப்பாட்டை தடுக்கிறது.இதேப்போல் அதிக அளவு மது அருந்துதல் என்பது வைட்டமின் பி-12 குறைப்பாட்டை உருவாக்கும். இதனால் உடல் பலவீனம் அதிகரிக்கும். எப்போதும் சோர்வு உணர்ச்சி காணப்படும்.சர்க்கரை நோய் மாரடைப்புக்கு வழிவகுக்க வாய்ப்பு இருப்பதால் நீரிழவு நோயாளிகள் புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை உடனே கை விடுவது அவசியம்
0 Comments