Subscribe Us

Header Ads

(Himalayan mountain )இமயமலை



                                                  பூமி என்பது நலவியல் தோற்றத்தை வைத்து கண்ட தட்டுகளாக வரையறக்கப்பட்டுள்ளது.இந்த கண்ட தட்டுக்கள் திடிரென நகரும் போது பூமியின்மேல்மட்டத்தில் நில அமைப்பு மாறுதலுக்கு உள்ளாகிளது.இதற்கு ஒரு உதாரனம் இமய மலை.பல கோடி ஆண்டுகளக்கு முன்னால் தற்போது இமய மலை இருக்கும் பகுதியில் ‘டெத்தீஸ்’ என்ற கடல் இருந்தது. ஒரு கட்டத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்ட பேரும் அழுத்தத்தின் காரணமாக இந்திய தட்டு வட கிழக்கு திசையில் நகர்ந்து டெத்தீஸ்’ கடலின் வடபுறம் இருந்த ஆசிய தட்டுடன் முட்ட இதனால் பூமியின் நில பகுதி பிதுங்கி கொண்டு மேலே வர டெத்தீஸ்’ கடல் தூர்ந்து போய் இமயமலை உருவானது.

           பூகம்கள் தொடர்வதால் இமயமலை அமைப்பிலும் தொடர்மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. 110 ஆண்டுகளுக்கு முன் 1905-ம் ஆண்டு இமாசல பிரதேச மாநிலம் கங்கரா அருகே உள்ள பகுதியை மையமாக கொண்டு 7.8 ரிக்டர்  அளவில் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில் பூமிக்கு அருகிலுள்ள இந்திய பாறை தட்டில் 600 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளவு ஏற்பட்டதாக பூகம்பவியல் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள இந்திய பாறை தட்டுக்கள் அடிக்கடி அரசிக் கௌள்வதாலும் ,பூகம்பங்கள் ஏற்படுவதாலும் இந்திய நிலப்பகுதி சிறிது , சிறிதாக வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் உள்ள இந்திய மற்றும் யூரேசியா தட்டுக்கள் உரசிக்கொள்வதன் காரணமாக  ஏற்படும் அழுத்தத்தால் இமயமலையின் சில பகுதிகள் ஆண்டுக்கு ஒரு சென்டி மீட்டர் வரை உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்தது. இந்தியாவின் இமயமலை பகுதியில் உள்ள காஷ்மீர், இமாசல பிரதேசம் , உத்திர பிரதேசம் பீகார் மாநிலங்களின் வட பகுதிகள் அந்தமான் தீவு,வனகிழக்கு மாநிலங்கள்  ஆகிய பகுதிகளில் பூகம்பம் ஆதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக தமிழ்நாடு , கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது

Post a Comment

0 Comments