தேர்வெழுதும் போது
என் கைகளிடம் கேட்டேன்
எழுத எழுத்து வரவில்லை என்றது
கண்களிடம் கேட்டேன்
கண்ணால் நான் பார்த்தது பொய் என்றது
என் காதுகளிடமும் கூடக் கேட்டேன்
காதால் நான் கேட்டது பொய் என்றது
என் உதடுகளிடம் கூறு என்றேன்
கூற குறலில்லை என்று மறுத்துவிட்டது
இறுதியாக சிந்தனையிடம் கேட்டேன்
மனதிடம் கேள் என்று என் மனதை திறந்தது.
0 Comments