Subscribe Us

Header Ads

Tamil website

தமிழ்ப்பேழைMydictionary. In என்ற இணையதளம் மூலம் என்ற புதிய தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம் அறிமுகமானது. இதில் தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்கள் பற்றி நாம் அறிந்துக் கொள்ளலாம். இவை தமிழப்பேழை மட்டுமல்லாமல் நமக்கு வேண்டிய நூலின் பெயர்கள், ஒரு வார்த்தக்கொண்டு அறியும் பழமொழிகள் மற்றும் விடுகதைகள் என பல்வேறு கோணங்களில் நாம் இந்த செயலியை பயன்படுத்தலாம். இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற் பதிவுகள் உள்ளன. இத்தமிழ்ப்பேழையில் முகப்பில் தொடங்கி வளங்கள் வரை இதனைப் பற்றிய அனைத்து விவரங்களும்,அதாவது தமிழ்ப் பேழையின் உரிமை, தொடர்புக்கு, அதனைப் பற்றிய பின்னூட்டம் என அனைத்து பதிவுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாம் அறியப்படாத அகராதிகள். அறிவியல், இலக்கண, இலக்கிய, சட்டவியல், நுண் கலையியல், கல்வெட்டியல், பண்ணை அறிவியல் அகராதிகள் என எண்ணிக்கையில் எண்ண முடியாத அளவிற்கு அகராதிகள், அகராதிகளின் பட்டியல் என்ற தலைப்பில் நமக்கு தமிழ்ப்பேழை வழங்குகிறது. இதன் மூலம் வரலாற்றில் பேசப்பட்ட சொற்கள், ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் என வரலாற்றின் தொடக்கப் பாதையை நம்மால் உணர முடிகிறது. இதுப்போன்று திரைப்படம் மற்றும் நம்முடைய தேடலின் எண்ணிக்கை என பல வடிவங்களில் தமிழ்ப்பேழை நமக்கு உதவுகிறது. 

Post a Comment

0 Comments